மருந்துகளுக்கு தட்டுப்பாடு | உதவ முன்வாருங்கள் | ஆறுதிருமுருகன்

யாழ்ப்பாணம்  மாவட்ட வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு காரணமாக  மக்கள் பிரதிநிகள் மற்றும் சமய சமூக நிறுவனங்கள்  அவசரமாக உதவி செய்ய முன்வாருங்கள் என செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் கோரிக்கை விடுத்ததுள்ளார்.

யாழ் நல்லூர் துர்க்காதேவி மண்டபத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம்  மாவட்ட வைத்தியசாலைகளில் மருந்துக்கத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.பொது மக்களின் அவசிய அத்தியாவசிய தேவையாக மருந்து உள்ளது . 

நாடு முழுவதும் பொருளாதார பிரச்சினை இருந்தாலும் யாழ் மாவட்ட வைத்தியசாலைகளில் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த மருந்துகள் இன்றி மக்கள் அவலப்படுகின்றார்கள் பெரும்பாலும் வைத்தியர்கள் வெளியிலேயே வாங்குமாறு எழுதிக் கொடுக்கின்றார்கள். வெளியே விற்பனை செய்கின்ற மருந்து விற்பனை நிலையங்களில் மருந்துகளின் விலை உச்சத்தை தொட்டுள்ளது.

மிகக் கவலையான விடயமாக தெல்லிப்பளையில்  அமைந்துள்ள புற்றுநோய் வைத்தியசாலைக்கு அடிப்படை மருந்துகள் மிகவும் தட்டுப்பாடாக உள்ளது. வைத்தியசாலையின் வைத்தியர்கள் இதை பற்றி  அறிவித்துள்ளார்கள்.

ஆனால் நாட்டு மக்களின்  பிரதிநிதிகளாக இருக்கின்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த இந்த விடயத்தில் கவனம் செலுத்தாது குறிப்பாக வைத்தியசாலைக்கு செல்லும்  மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாதவர்களாக இருக்கிறார்கள். 

சமய நிறுவனங்களாக இருக்கிற நாங்கள் 12 இலட்சம் ரூபாவுக்கு மருந்தினை பெற்று கொடுத்துள்ளோம். இந்த வாரம் செல்வச் சந்நிதி ஆச்சிரமம்  8 இலட்ச ரூபாவிற்கு மருந்தை பெற்றுக் கொடுத்துள்ளது.  தெல்லிப்பளை வைத்தியசாலையில் இளம்பிள்ளைகளுக்கான மருந்துகளை ஏற்றுகிறார்கள். வயோதிபர்களுக்கு மருந்து ஏற்றுவதற்கு மருந்து இல்லாமையால் வைத்தியர்களும் எதனை செய்வது என்று அந்தரித்து வருகிறார்கள்.

இந்த விடயத்தில் மக்கள் பிரதிநிதிகள் வெளிநாட்டு துதூவராலயங்கள்,உதவி நிறுவனங்களிடமாவது கோரிக்கைகளை முன்வைத்து மக்களுக்கான உதவிகளை செய்யவேண்டும். அவர்கள் இதில் கவனம் செலுத்தாது இருக்கிறார்கள்.

பலர் உதவிசெய்ய இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த விடயத்தை தெரிவுபடுத்த வேண்டும். பாராளுமன்றத்தில் பேசப்படும் விடயங்கள் கூட அக்கறைப்படுத்தப்படுவதாக இல்லை. யாரும் எதையும் பேசலாம் அதற்கு எதுவும் பலனில்லை நிண்டநேரம் பாராளுமன்றத்தில் பேசினோம் என்பதற்கு இன்று பலனில்லை.

மக்களை நேசிப்பவர்கள் வீடுவீடாக சென்று வாக்கு கேட்பவர்கள் ,மக்களின் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் வெறுமேன விழாக்களுக்கும்,கூட்டங்களுக்கும் , கொண்டாட்டங்களுக்கும் போவது மட்டுமல்ல நோயுற்றவர்கள்,துன்பப்படுபவர்கள் மத்தியில் சென்று அவர்கள் பிரச்சினைகளை கேட்கவேண்டும்.

தயவுசெய்து மக்கள் பிரதிநிகளாக இருப்பவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,கட்சி தலைவர்கள் ,உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள் நேரடியாக வைத்தியாலைகளுக்கு செல்லூங்கள். குறிப்பாக தெல்லிப்பளை வைத்தியசாலையில் வடக்கு கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்களே சிகிச்சை பெற்றுவருகிறார்கள். சிறுவர் முதல் வயோதிபர்கள் சிகிச்சைக்காக வருகிறார்கள் இவர்களை காப்பாற்ற வைத்தியர்கள் போராடுகிறார்கள்.

ஆனால் கற்றறிந்த சமூகம், மக்களின் பிரதிநிதிகள் என்று கூறுபவர்கள் இதில் கவனம் செலுத்தாது இருப்பது மிக கவலையான விடயம். எனவே சகல தமிழ்  மக்களின் பிரதிநிதிகளும்  நாங்கள் தான் மக்களின் தலைவர்கள் என கூறுபவர்கள்.

உடனடியாக தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு மட்டுமன்றி யாழ்போதனா வைத்திய சாலை உட்பட  அனைத்து பகுதிகளிலும் உள்ள வைத்தியசாலைகளுக்கு சென்று  வைத்தியசாலைகளுக்கு தேவையான மருந்துகளின் விபரங்களை பெற்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலோ அல்லது தங்களுடைய சிறப்புரிமையை பயன்படுத்தி இந்தியா உள்ளிட்ட சகல துதூவராலயங்களிடம் கோரிக்கைகளை முன்வைத்து நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு முன்வருமாறு  தமிழ்மக்கள் சார்பில் சமூக பொறுப்புள்ளவன் என்ற வகையில் சமூகத்தின் சார்பில்  கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

ஆசிரியர்