அவுஸ்திரேலியாவில் இலங்கை பெண் கொலை | கணவர் சந்தேகத்தில் கைது

அவுஸ்திரேலியாவின்  மெல்போர்ன் பகுதியில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயார் ஒருவர் தனது வீட்டில் கூரிய ஆயுதத்தால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவ்வாறு உயிரிழந்தவர் நெலோமி பெரேரா என்ற மூன்று பிள்ளைகளின் தாயார் என தெரிய வந்துள்ளது.

இந்தக் கொலைச் சம்பவம்  தொடர்பில் அவரது கணவர் மெல்போர்ன் பொலிஸாரால் சந்தேகத்தில்  கைது செய்யப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

ஆசிரியர்