செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ் பல்கலையில் புதிய கற்கை நெறிக்கான கலந்துரையாடல்

யாழ் பல்கலையில் புதிய கற்கை நெறிக்கான கலந்துரையாடல்

1 minutes read

யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் டிப்ளோமா கற்கைநெறியினை ஆரம்பிப்பதற்கான பங்குதார்களுடன் கலந்துரையாடல்

முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடமானது சமூக நலன்கருதி பல்வேறு வகையான வேலைத் திட்டங்களினை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

அந்த வகையில் முகாமைத்துவக கற்கைகள் மற்றும் வணிக பீடமும் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம்;(வுhந ஊநவெசந கழச ழுpநn யனெ னுளைவயnஉந டுநயசniபெ) ஊடக சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் டிப்ளோமா கற்கைநெறியினை (னுipடழஅய in வுழரசளைஅ யனெ ர்ழளிவையடவைல ஆயயெபநஅநவெ) ஆரம்பிக்க தீர்மானித்திருந்தது. அதன் முதற்கட்டமாக பங்குதார்களுடன் கலந்துரையாடல்; (ளுவயமநாழடனநசள’ அநநவiபெ) முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட பீடாதிபதி பேராசிரியர் பா.நிமலதாசன்; தலைமையில் மார்கழி மாதம் 8ஆம் திகதி முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிகபீடத்தில் நடைபெற்றது.

இதில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர்கள் சிவக்கொழுந்து சிறிசற்குணராசா உட்பட பேராசிரியர்கள் விடுதி உரிமையாளர்கள்இ துறைசார் வல்லுனர்கள் ஏனைய பல்கலைக்கழகங்களின்இ பேராசிரியர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்கள்இ யாழ்ப்பாண வர்;த்தக மற்றும் தொழில்துறை மையத்தின் தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ் கலந்துரையாடலில் கருத்துரை வழங்கிய யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராசா இவ்வாறான புதிய மற்றும் தொழில்வாய்ப்பு உள்ள கற்கைகளினை ஆரம்பிப்பதன் மூலம் நாட்டில் உள்ள வேலையற்ற இளைஞர்களின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையினை ஏற்படுத்த வாய்ப்பாக அமையும் என்றும்இ முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடமானது பல்வேறு வகையான புதிய வினைத்திறனான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது எனச்சுட்டி காட்டியும் அதற்கான பாராட்டினையும் தெரிவித்தார்.

நிகழ்விற்கு தலைமை வாகித்து உரையாற்றிய முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட பீடாதிபதி பேராசிரியர் பா.நிமலதாசன் எவ்வாறு பீடமானது சமுதாய வளர்ச்சிக்கு துணை புரிகின்றது என்றும் இவ் கற்கை நெறியின் நன்மைகள் பற்றியும் விளக்கி கூறியிருந்தார்.

சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் அலகின் இணைப்பாளர் பேராசிரியர் சி.சிவேசன் சுற்றுலா விருந்தோம்பல் துறையானது மிகவும் விரைவாக சுழல் காரணிகளின் மாற்றங்களினால் பாதிக்கப்பட கூடிய (எரடநெசயடிடந iனெரளவசல)  ஒரு தொழில் அமைப்பு என்றும் ஆனாலும் அவை அதிகளவான வெளிநாட்டு வருவாயினை உழைத்துத் தரும் துறையாக அமைந்துள்ளது என்றும்இ விருந்தோம்பல் தமிழர் வாழ்வியல் அங்கமான கலை எனறும் அதனை எவ்வாறு உயரி பண்பாட்டுக்கு புரள்வு ஏற்படாவண்ணம் வர்த்தகரீதியாக மாற்றலாம் என்பதனை இக்கற்கைகள் வெளிப்படுத்தும் என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் இவ் கலந்துரையாடலில் பங்கேற்று கருத்து பரிமாறியவர்கள் அனைவரும் இவ் கற்கை நெறியின் முக்கியத்துவத்தினையும் இதனை தொடங்குவதற்கு பீடம் எடுக்கின்ற முயற்சியையும் வெகுவாகப் பாராட்டியதுடன் கற்கை நெறி தொடர்பான பல்வேறுபட்ட விடயங்களும் ஆராயப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.