கஹதுட்டுவ – தியகம தொழில்நுட்ப டிப்ளோமா பல்கலைக்கழக விடுதியில் மயங்கி விழுந்த மாணவன் ஒருவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மாணவன் தனது அறையில் மயங்கி விழுந்து ஹோமாகம வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
தியகம தொழில்நுட்ப டிப்ளோமா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்கும் கட்டுகம்பளையைச் சேர்ந்த மலித் யசோத என்ற 25 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனை இன்று மாலை நடைபெறவுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.