அமைச்சர்களும் சேர்ந்தே கோட்டாவை விரட்டினர்! – சாகர குற்றச்சாட்டு

“கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியிலிருந்து விரட்டியடிப்பதற்கு அப்போதைய அமைச்சர்கள் சிலரும் சூழ்ச்சி செய்தனர்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் குற்றம் சாட்டினார்.

மக்கள் விடயங்களைத் தற்போது புரிந்துகொண்டுள்ளனர் என்றும், எதிர்காலத்தில் இவ்வாறானவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் நம்பிக்கை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தனக்கு எதிராகச் சூழ்ச்சி செய்யப்படுவதை கோட்டாபய ஒப்புக்கொள்ள மறுத்து விட்டார். அதுவே அவர் வீடு செல்லச் காரணமானது.

கோட்டாபய ராஜபக்ச பதவி வகித்த காலத்தில் எரிபொருளுக்குக் கடுமையான தட்டுப்பாடு நிலவியது. எனினும், அந்தக் காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட அதே அளவு எரிபொருள் தற்போது இறக்குமதி செய்யப்படுகின்றது. தற்போது வரிசைகளைக் காணவில்லை” – என்றார்.

ஆசிரியர்