0
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் இன்று நள்ளிரவுடன் ஒத்திவைக்கப்படவுள்ளது என நாடாளுமன்ற தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, எதிர்வரும் பெப்ரவரி 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத் தொடர் ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அக்கிராசன உரையை நிகழ்த்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.