பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைக் காவலில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை விடுதலை செய்யக் கோரியும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தியும், தமிழ், சிங்கள, முஸ்லிம் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தும் கையெழுத்துப் போராட்டம் இன்று வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது.
காலை 10 மணியளவில் வவுனியா பழைய பஸ் நிலையம், இலுப்பையடிப் பகுதிகளில் வவுனியா மாவட்ட மக்கள் திட்ட ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கையெழுத்து சேகரிப்பு இடம்பெற்றது.
இதில் வவுனியா நகர சபை உறுப்பினர்கள், வவுனியா மாவட்ட மக்கள் திட்ட ஒன்றியத்தின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது கையெழுத்துக்களை இட்டு ஆதரவை வழங்கினர்.
