செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வவுனியாவில் 1,580 வேட்பாளர்கள் போட்டி!

வவுனியாவில் 1,580 வேட்பாளர்கள் போட்டி!

1 minutes read

வவுனியா மாவட்டத்தில் 103 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 1,580 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர்.

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் பணி கடந்த வாரம் முற்றுப்பெற்றது. இந்நிலையில் வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஐந்து உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்த 53 அரசியல் கட்சிகள் மற்றும் 13 சுயேட்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

அந்தவகையில் குறித்த கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களைச் சேர்ந்த 1,580 வேட்பாளர்கள் இம்முறை தேர்தலில் களம் இறங்கியுள்ள நிலையில் அவர்களைத் தெரிவு செய்வதற்காக ஒரு இலட்சத்து 26 ஆயிரத்து 915 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளர்.

குறிப்பாக வவுனியா மாநகர சபையில் 20 ஆயிரத்து 846 வாக்காளர்களும், வவுனியா வடக்கு பிரதேச சபையில் 14 ஆயிரத்து 533 வாக்காளர்களும், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையில் 11 ஆயிரத்து 417 வாக்காளர்களும், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் 61 ஆயிரத்து 647 வாக்காளர்களும், வெங்கலசெட்டிகுளம் பிரதேச சபையில் 18 ஆயிரத்து 472 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

தேர்தலுக்கான பூர்வாங்க ஏற்பாடுகளை வவுனியா மாவட்ட தேரதல் திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.