செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க வட்ஸ்அப் பயன்படுத்த அனுமதி

கிரிக்கெட் வீரர் தனுஷ்க வட்ஸ்அப் பயன்படுத்த அனுமதி

1 minutes read

டேட்டடிங் செயலியான டிண்டரில் தான் சந்தித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவின் பிணை நிபந்தனைகள் தளர்த்தப்பட்ட பின்னர், அவர் வட்ஸ்அப்பைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனுஷ்க குணதிலக, கடந்த ஆண்டு நவம்பர் 2ஆம் திகதியன்று, அனுமதியின்றி பாலுறவு கொண்டமை உள்ளிட்ட 04 குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டதால், ஆஸி. – சிட்னியின் டவுனிங் சென்டர் உள்ளூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில், 31 வயதான குணதிலக்க தனது பிணை நிபந்தனைகளை மாற்றுமாறு கோரி, இன்று (23) மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதன்படி, குணதிலக்க வட்ஸ்அப்பைப் பயன்படுத்த நீதிமன்றம் அனுமதித்ததுடன், டேட்டிங்கை எளிதாக்கவோ அல்லது ஏற்பாடு செய்யவோ இந்த செயலி பயன்படுத்தப்படக் கூடாது என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, டேட்டிங் செயலிகள் அல்லது சமூக ஊடகங்கள் எதையும் பயன்படுத்த அவருக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

அத்துடன், இரவில் வெளியே செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு, இரவு நேரத்தில் வெளியில் செல்ல அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.