செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை காணாமல்போன முஸ்லிம் யுவதி மீட்பு!

காணாமல்போன முஸ்லிம் யுவதி மீட்பு!

0 minutes read

அத்தனகல, ஒகடபொல பகுதியில் இருந்து காணாமல்போன யுவதி நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை யுவதியின் தாயார் இன்று காலை ஊடகங்களிடம் உறுதிப்படுத்தினார்.

பாத்திமா இல்மா (வயது 17) என்ற குறித்த யுவதி நேற்றுக் காலை முதல் காணாமல்போயிருந்தார். இது தொடர்பில் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பில் யுவதியின் தாயார் இன்று காலை ஊடகங்களிடம் கூறியதாவது:-

“தொலைபேசி பாவிக்க வேண்டாமென மகளிடம் கூறினேன். இதனால் இருவருக்கும் இடையில சிறு தர்க்கம் ஏற்பட்டது. இதையடுத்து நேற்றுக் காலை முதல் அவர் காணாமல்போயிருந்தார்.

இந்நிலையில், நேற்றிரவு 9 மணியளவில் தெஹிவளை பொலிஸாரிடமிருந்து, மகள் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. பின்னர் இரவு 11 மணியளவில் மகளை நாம் பொறுப்பேற்றோம்.” – என்றார்.

குறித்த யுவதி தனது நண்பர்களின் வீட்டுக்குச் சென்றிருக்கக் கூடும் எனவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.