June 5, 2023 11:03 am

யாழ்ப்பாணத்தில் மாற்றுத்திறனாளிகளான மகள்களைச் சீரழித்த தந்தை!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளான 11 வயதுச் சிறுமிமையைப் பாலியல் வன்புணர்வும், அவரது சகோதரியான 8 வயதுச் சிறுமியைப் பாலியல் துர்நடத்தைக்கும் உட்படுத்திய சந்தேகத்தில் தந்தையைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாற்றுத் திறனாளிகளான சிறுமிகளின் நடத்தைகளில் மாற்றம் தென்பட்டதையடுத்து பாடசாலை ஆசிரியர்களால் மருத்துவ பரிசோதனைக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இதன்போது முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவர்களது தந்தையால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

சிறுமிகள் பாடசாலையில் தங்கி கற்று வருகின்றனர். விடுமுறையில் வீட்டுக்கு வந்த போதே இந்தச் சம்பவம் நடைபெற்றது என்று விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

சிறுமிகளின் தாய் கூலி வேலைக்குச் செல்பவர் என்றும், அவர் காலையில் சென்றால் இரவே வீடு திரும்புவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சந்தர்ப்பத்திலேயே சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பொலிஸார் கூறுகின்றனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்