June 5, 2023 12:14 pm

தையிட்டி விகாரைக்கு எதிர்ப்பு: இன்று 9 பேர் கைது!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றக் கோரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்ட , நான்கு பெண்கள் உள்ளிட்ட 9 பேர் பலாலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தையிட்டி விகாரையை அகற்றக் கோரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் அவரது கட்சி உறுப்பினர்கள் சிலர் இன்று குறித்த விகாரைக்குச் சற்று தூரத்தில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

அதன்போது அங்கு வந்திருந்த பலாலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார், இந்த விடத்தில் சட்டவிரோதமான முறையில் கூட முடியாது. அதனால் இங்கிருந்து அனைவரும் கலைந்து செல்லுமாறு பணித்தனர்.

அதனை மீறி அங்கு நின்றவர்களைச் சட்டவிரோதமான முறையில் கூடி, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க முயன்றனர் எனும் குற்றச்சாட்டில் நான்கு பெண்கள் உள்ளிட்ட 9 பேரைக் கைது செய்தனர்.

அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தனியார் காணி ஒன்றில் நின்றிருந்த வேளை அவரை வலுக்கட்டாயமாகத் தூக்கி அக்காணியில் இருந்து பொலிஸார் அப்புறப்படுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்