June 4, 2023 8:47 pm

பூஸா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளார் என்று காலி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்டி மொரட்டுவைப் பிரதேசத்தைச் சேர்ந்த அசோக ருக்மல் பெர்னாண்டோ என்ற கைதியே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.

இந்தக் கைதி தினசரி வேலைப் பிரிவில் அமர்த்தப்பட்டு சிறை வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டவர் என்றும், அவ்வாறு பணியில் ஈடுபடத்தப்பட்ட அவர் வேலை முடிந்தும் மீண்டும் சிறைக்குள் வரவில்லை என்பதை அறிந்ததும் அவர் தப்பியோடியது உறுதி செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்