June 2, 2023 11:59 am

மாணவர்களைத் தாக்கிய குளவிகள்! – பாடசாலைக்குப் பூட்டு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

பண்டாரவளை பாடசாலை ஒன்றில் இன்று காலை திடீர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 6 மாணவர்களும், 5 பெற்றோர்களும் பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பண்டாரவளை தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பாடசாலைக்கு அருகே உள்ள தனியார் நிலத்தில் கட்டப்பட்டிருந்த குளவி கூடு கலைந்து மாணவர்கள் மற்றும் அவர்களைப் பாடசாலைக்கு அழைத்து வந்த பெற்றோர்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளது.

இதன்காரணமாக குறித்த பாடசாலையை இன்றும் நாளையும் மூட பண்டாரவளை வலயக் கல்வி அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில் குளவிக் கொட்டால் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்