June 5, 2023 10:13 am

சிறுத்தை தாக்கி தொழிலாளி ஒருவர் படுகாயம்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

நுவரெலியா மாவட்டம், பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ, செல்வகந்த தோட்ட 5 ஆம் இலக்கத் தேயிலை மலையில் தேயிலைக் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த ஆண் தொழிலாளி ஒருவர் சிறுத்தையின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயம் அடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.

5 ஆம் இலக்கத் தேயிலை மலையில் பதுங்கியிருந்த சிறுத்தையே குறித்த தொழிலாளியைத் தாக்கியது எனவும், சிறுத்தை ஆறு அடி நீளம் கொண்டது எனவும் சம்பவத்தை நேரில் பார்த்த தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

காயங்களுக்குள்ளான ஆண் தொழிலாளி பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என்று பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஏ.எஸ்.கே.ஜெயசூரிய தெரிவித்தார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்