June 7, 2023 7:26 am

ரயில் மோதி இரண்டு இளைஞர்கள் சாவு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

கையடக்கத்தொலைபேசியில் பேசிக்கொண்டு ரயில் மார்க்கத்தில் நடந்து சென்ற இரண்டு இளைஞர்கள் ரயில் மோதி உயிரிழந்துள்ளனர்.

இந்தப் பரிதாப சம்பவம் வெயாங்கொடை – வத்துருவ ரயில் நிலையத்துக்கு அருகில், இன்று அதிகாலை 5.45 அளவில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த இரு இளைஞர்களின் வீடுகளும் ரயில் மார்க்கத்துக்கு அருகாமையில் அமைந்துள்ளது எனவும், அவர்கள் இன்று காலை சுற்றுலா செல்வதற்குத் தயாராகி வத்துருவ ரயில் நிலையத்தை நோக்கிச் சென்றுள்ளனர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும், இருவரும் கையடக்கத்தொலைபேசியில் பேசிக் கொண்டு நடந்து சென்ற போது, பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

வெயாங்கொடை – வத்துருவ பிரதேசத்தைச் சேர்ந்த 18 மற்றும் 19 வயதுடைய இளைஞர்களே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்