June 9, 2023 8:57 am

கைது செய்வதைத் தடுக்கக் கோரி போதகர் ஜெரோம் மனுத் தாக்கல்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தனது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அவர் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொலிஸ்மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர், அதன் பணிப்பாளர் மற்றும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையத் தளபதி ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பிரதிவாதிகள் தன்னைச் சட்டவிரோதமாகக் கைது செய்யத் தயாராகி வருகின்றனர் என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது எனத் தீர்ப்பளிக்குமாறும், அவர்கள் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிரதிவாதிகளுக்கு வழங்குமாறும் கோரியும் குறித்த மனுவைப் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தனது சட்டத்தரணிகள் ஊடாகத் தாக்கல் செய்துள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்