செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை “மத வெறுப்பைக் கக்கி வரும் தேரர்களை நோக்கியும் சட்டம் இனிப் பாய வேண்டும்”

“மத வெறுப்பைக் கக்கி வரும் தேரர்களை நோக்கியும் சட்டம் இனிப் பாய வேண்டும்”

1 minutes read

“போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் சமூக பேச்சாளர் நதாஷா எதிரிசிங்க ஆகியோருக்கு எதிராக அரசின் சட்டம், ஒழுங்கு விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. சட்டம், ஒழுங்கு, நீதி துறை தன் கடமையைச் செய்யட்டும். அதேவேளை இந்நாட்டில் இனவாத வெறுப்பு பேச்சுகளைத் தொடர்ந்து இந்து, இஸ்லாம், கத்தோலிக்க மதங்களுக்கு எதிராகப் பேசி வரும் பெளத்த பிக்குகளை நோக்கியும் இதே சட்டம், ஒழுங்கு, நீதித்துறை பாய வேண்டும். எந்தவொரு மதத் தலைவரும், செயற்பாட்டாளரும், தமது இனவாத, மதவாத நடவடிக்கைள் தொடர்பில் இனிமேல் சட்டத்தின் முன் விலக்குப் பெறக் கூடாது.”

– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில் மேலும் உள்ளதாவது:-

“பாஸ்டர் ஜெரோம், முற்போக்குப் பேச்சாளர் நதாஷா ஆகியோரைச் சுற்றி வளைத்திருக்கும் பொலிஸ், நீதிமன்ற சட்டங்கள், இந்நாட்டில் இனவாத வெறுப்பு பேச்சுகளைத் தொடர்ந்து பேசி வரும் பெளத்த பிக்குமார்களுக்கு எதிராகவும் பயன்பட வேண்டும். இனிமேல் இந்நாட்டில் சட்டம் ஒருபக்கச் சார்பாக இருக்க முடியாது.” – என்றுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோரின் ருவிட்டர் தளங்களுக்கும், தமது ருவிட்டர் செய்தியை மனோ கணேசன் எம்.பி. இணைத்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More