October 4, 2023 4:26 am

வவுனியாவில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

வவுனியா, புளியங்குளம் – மதியாமடு பகுதியில் 38 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புளியங்குளம் – மதியாமடு பகுதியில் வசித்து வந்த கெ.சதீஸ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு தனது தோட்டத்துக்குச் சென்ற குறித்த குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.

அவர் தூக்கில் தொங்குவதை அவதானித்த நபர் ஒருவர் புளியங்குளம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டதுடன், இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையே தற்கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என்று ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்