Thursday, May 2, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவு! – ரணிலிடம் சமந்தா உறுதி

இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவு! – ரணிலிடம் சமந்தா உறுதி

1 minutes read

ஐக்கிய நாடுகள் சபையின் 78 பொதுச்சபை கூட்டத்தொடருக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நியூயோர்க்கில் உள்ள ஐ.நா சபையின் இணைக் காரியாலயத்தில் ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் நிறுவனத்தின் பிரதானி சமந்தா பவரை சந்தித்தார்.

இலங்கை நிதி நெருக்கடிக்கு முகம்கொடுத்திருந்த போது ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் நிறுவனம் இலங்கைக்கு வழங்கிய ஆதரவுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் பற்றிய சுருக்கமான விளக்கமளித்த ஜனாதிபதி, அதனை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு அரசின் அர்ப்பணிப்பையும் எடுத்துரைத்தார்.

மேலும், ஊழல் ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றிக்கொண்டதன் பின்னரான செயன்முறைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்குப் பயிற்சி பெற்ற பணியாளர்களை இணைத்துக்கொள்வது தொடர்பிலான சவாலுக்கு முகம்கொடுத்திருப்பதாகவும், அதனால் ஊழல் ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றிக் கொண்டுள்ளமையின் பலன்களை அடைந்துகொள்ள இன்னும் இரண்டு வருடங்கள் அவசியப்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், ஊழலுக்கு எதிரான கொள்கையை அமுல்படுத்துவதற்கு தமது அரசின் முழு அரச பொறிமுறையும் முழுமையாக உட்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்த ஜனாதிபதி, இந்தச் செயற்பாடுகளை விரைவாக நிறைவு செய்வதற்குத் தேவையான ஆதரவை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

“அஸ்வெசும” வேலைத்திட்டத்தின் அறிமுகத்தினூடாக நலன்புரித் திட்டங்களின் வினைத்திறன் மற்றும் செயற்றிறனை மேம்படுத்துவதில் இலங்கை அரசு மேற்கொண்ட முயற்சிகள் தொடர்பில் இந்தச் சந்திப்பின் போது ஜனாதிபதியால் விளக்கமளிக்கப்பட்டது.

இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் நிறுவனம் தொடர்ந்து ஆதரவளிக்கும் அதேவேளையில் தேவையான நிபுணத்துவ உதவிகளையும் வழங்கும் என்று சமந்தா பவர் இதன்போது தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More