செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கோட்டா – பிள்ளையானைத் தூக்கிலிட வேண்டும்! – சஜித் வலியுறுத்து

கோட்டா – பிள்ளையானைத் தூக்கிலிட வேண்டும்! – சஜித் வலியுறுத்து

1 minutes read

“முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், இந்நாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனும் (பிள்ளையான்) மாபெரும் மனிதப் படுகொலைக் குற்றவாளிகள். அவர்கள் இருவரையும் தூக்கிலிட வேண்டும். அதைவிடுத்து அவர்களைப் பாதுகாக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கக்கூடாது.”

– இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் மன்னிக்கவே முடியாத மாபெரும் குற்றச் செயல். இந்தத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் என்று சனல் 4 தொலைக்காட்சி அடையாளம் காட்டியுள்ள கோட்டாபயவும், பிள்ளையானும் மறுப்பு அறிக்கைகளை விட்டுத் தப்ப முயல்கின்றனர்.

அதேவேளை, சனல் 4 தெலைக்காட்சியின் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ள ஆணைக்குழுவும், அரசு நியமிக்கவுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவும் கோட்டாபயவையும், பிள்ளையானையும் காப்பாற்றுவதற்கான திட்டங்களாகும்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் இன்று சர்வதேச சமூகத்தின் முழுக் கவனத்தையும் ஈர்த்துள்ளது. எனவே, இது தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு ஜனாதிபதி இடமளிக்க வேண்டும். அதைவிடுத்துத் தூக்கிலிடப்பட வேண்டிய மாபெரும் மனிதப் படுகொலைக் குற்றவாளிகளான கோட்டாபயவையும், பிள்ளையானையும் பாதுகாக்க ஜனாதிபதி முயற்சிக்கக்கூடாது.

கோட்டாபய, பிள்ளையான் மட்டுமல்ல உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட பாதுகாப்புத் தரப்பினர், அரசியல்வாதிகள் மற்றும் தனிநபர்கள் ஆகியோருக்கும் உரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.” – என்றார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் விசாரணைக்குத் தான் எந்நேரமும் தயார் என்றும், தன் மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டால் தூக்கு மேடைக்கும் செல்லத் தான் தயார் என்றும் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.