December 10, 2023 1:36 am

கோட்டாவின் காலத்தில் பூனை போல இருந்தவர்கள் தற்போது நாய்போல குரைக்கின்றனர் | லான்சா

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகவிருந்த வேளை பூனைகள் போல நடந்துகொண்ட நாமல்ராஜபக்சவும்  சாகரகாரியவசமும் தற்போது நாய்கள் போல குரைக்கின்றனர் என பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் லான்ச தெரிவித்துள்ளார்.

சமீபத்தைய அமைச்சரவை மாற்றம் குறித்து நாமல்ராஜபக்சவும் சாகரகாரியவசமும் கடும் கருத்துக்களை வெளியிட்டுள்ளமை குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் நிமால்லான்ச இதனை தெரிவித்துள்ளார்.

அமைச்;சரவை மாற்றங்களை ஜனாதிபதி உரிய முறையில் மேற்கொண்டுள்ளார் என தெரிவித்துள்ள நிமால் லான்ச நாமலும் சாகரவும் அதனை எதிர்த்தால் அவர்கள் தங்களுக்கு மூளைகோளாறா என பரிசோதிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக பொய் தெரிவிப்பதை விட சாகர காரியவசம் பதவியை இராஜினாமா செய்துவிட்டு இவ்வாறான கருத்துக்களை வெளியிடவேண்டும் அவருக்கு இதற்கான துணிச்சல் உள்ளதா என நான் சந்தேகிக்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையை கோட்டபாய ராஜபக்ச நான்கு தடவை மாற்றியவேளை நாமல் அமைதியாகயிருந்தார்  ஆனால் ரணில்விக்கிரமசிங்க ஒருமுறை அமைச்சரவை மாற்றத்தை மேற்கொண்டவுடன் நாமல் தனது வழமையான சண்டியன் பாணியில் பேசுகின்றார் எனவும் நிமால் லான்ச  தெரிவித்துள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்