December 4, 2023 5:47 am

கைது செய்யப்பட்ட யாழ் – கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சல் தரை காணிகளை சிங்கள மக்கள் அபகரிப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்களை மேலதிக நீதவான் அன்வர் சதாத் ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

எனினும், குறித்த நீதிமன்ற எல்லைக்குட்பட்ட வதிவிடத்தைக் கொண்ட ஆள் சரீரப்பிணையில் அவர்களை எடுப்பதற்கு தேசிய அடையாள அட்டையை கிராமசேவகர் உறுதிப்படுத்திய ஆவணங்களை நீதிமன்றில் நேற்றைய தினம் ஒப்படைக்க தாமதமான நிலையில் அவர்களை சிறைச்சாலை உத்தியோகத்தர்களிடம் கையளித்ததையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

குறித்த மாணவர்கள் மட்டக்களப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களை ஆள்பிணையில் எடுப்பவர்கள் ஆவணங்களுடன் சிறைச்சாலைக்கு சென்று வழங்கியதன் பின்னர் இன்று விடுவிக்கப்பட்டனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்