November 28, 2023 7:20 pm

கடுமையான மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

நாட்டின் பலப் பிரதேசங்களில் இன்று (06) மாலை மற்றும் இரவு வேளைகளில் இடியுடன் கூடிய கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மேல், மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல், ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை  பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.  பொதுமக்கள் மழை மற்றும் மின்னலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்