Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மூதூரில் ஒருவர் வெட்டிப் படுகொலை!

மூதூரில் ஒருவர் வெட்டிப் படுகொலை!

1 minutes read
மூதூரில் நபர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறிய நிலையில், ஒரு குழுவினரால் மேற்படி நபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மூதூர், ஈச்சலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இறங்குதுறைப் பகுதியிலேயே இந்தப் படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இறங்குதுறைப் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலில் படுகாயமடைந்த நபர் ஈச்சலம்பற்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலையுடன் தொடர்புடையவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஈச்சலம்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More