Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பஸ் – மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் சாவு!

பஸ் – மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் சாவு!

1 minutes read

அக்கரைப்பற்று, கல்முனை – மாட்டுபாளையம் பகுதியில் பஸ் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதியைப் பொலிஸார் கைது செய்தனர்.

நிந்தவூர், 5 ஆம் பிரிவைச் சேர்ந்த 72 வயதுடைய வயோபதிபரே இவ்வாறு உயிரிழந்தார்.

பொத்துவில் இருந்து கல்முனை நோக்கிப் பயணித்த தனியார் பஸ், நிந்தவூர் மாட்டுபாளையம் சந்திக்கு அருகில் அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியின் வலது பக்கம் திரும்பிய நிலையில், பின்னால் வந்த பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற வயோதிபர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நிந்தவூர் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More