Tuesday, April 30, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மொட்டு சார்பில் மிகச் சிறந்த வேட்பாளரைக் களமிறக்குவோம்! – மஹிந்த திட்டவட்டம்

மொட்டு சார்பில் மிகச் சிறந்த வேட்பாளரைக் களமிறக்குவோம்! – மஹிந்த திட்டவட்டம்

1 minutes read
“ஜனாதிபதித் தேர்தலில் எமது கட்சி சார்பில் மிகச் சிறந்த வேட்பாளரைக் களமிறக்குவோம்” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான முன்னாள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் மத வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டாறு குறிப்பிட்டார்.

இதன்போது ஊடகவியலாளர்கள் வினவிய கேள்விகளுக்கு அவர் பின்வருமாறு பதிலளித்தார்.

கேள்வி:- உங்களின் தாய்க் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ளன. உங்களின் அரசியல் அந்தக் கட்சியில் இருந்தே ஆரம்பமானது. ஆகவே, கட்சியின் தற்போதைய நிலைமை தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்:- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ளன. பிரச்சினைகளுக்குப் பேச்சுகள் ஊடாக வெகுவிரைவில் தீர்வு காணப்பட வேண்டும்.

கேள்வி:- உங்களின் பங்காளிகள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்துள்ளார்களே… அது உங்களுக்குச் சவாலாக அமையாதா?

பதில்:- சவால் ஏதுமில்லை. தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் அரசியல் கூட்டணிகள் ஸ்தாபிக்கப்படுவது இயல்பானதே.

கேள்வி:- ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடுவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளாரே?

பதில்:- அது அவரது நிலைப்பாடு. நாங்கள் எமது கட்சியின் வேட்பாளரை அறிவிப்போம். கட்சியின் நிறைவேற்று சபை ஊடாக சிறந்த தீர்மானத்தை எடுப்போம். மிகச் சிறந்த வேட்பாளரைக் களமிறக்குவோம்.

கேள்வி:- நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கப் போகின்றீர்களா?

பதில்:- ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு நாமல் ராஜபக்ஷவுக்கு இன்னும் காலம் உள்ளது.

கேள்வி:- புத்தாண்டு தொடர்பில் மக்களுக்கு ஏதேனும் குறிப்பிட விரும்புகின்றீர்களா?

பதில்:- அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். மகிழ்வுடன் புத்தாண்டைக் கொண்டாட வேண்டும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More