Friday, May 3, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கை மக்களின் காவலனாக வாழ்ந்த பாலித தெவரப்பெரும!

இலங்கை மக்களின் காவலனாக வாழ்ந்த பாலித தெவரப்பெரும!

2 minutes read
வாழும்போது ஒருவன் எப்படி வாழ்ந்தார் என்பதை அவரது இறுதி நிகழ்வில் கண்டுகொள்ளலாம் எனப் பலர் கூறுவதுண்டு. அந்தக் கூற்றுக்குச் சான்றாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் இறுதி நிகழ்வு அமைந்துள்ளது.

வாழும் காலத்தில் மக்களுக்காகப் பல சேவைகளைச் செய்த அரசியவாதிகளில் பாலித தெவரப்பெருமவும் ஒருவராவார். கொரோனா காலத்தில் மட்டுமல்லாது, வடக்கில் வெள்ளம் வந்தபோதும் தானே களத்தில் இறங்கி மக்களுக்காகச் சேவையாற்றியவர் தெவரப்பெரும. அவரது அகால மரணம் மூவின மக்களையும் துயரில் ஆழ்த்தியுள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக்கிரியைகள் நேற்றுப் பிற்பகல் அரச மரியாதையுடன் நடைபெற்றது.

அவரின் இறுதிக்கிரியைகள் பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் நேற்று பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமானது. இறுதி அஞ்சலி நிகழ்வின்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட உயர்மட்ட அரசியல்வாதிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் சடலத்துடன் அடக்கம் செய்யும் இடம் வரை கலந்துகொண்டு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.

பாலித தெவரப்பெரும வாழும் காலத்திலேயே மூவின மக்களுக்காக வாழ்ந்த அரசியல்வாதியாகப் போற்றப்பட்டார். அவரின் சமூகச் செயற்பாடுகள் தொடர்பான பல்வேறு காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியில் நீண்டகால அரசியல்வாதியாக இருந்த பாலிதவுக்கு ஏனைய அரசியல்வாதிகள் போன்று பெருந்தொகை சொத்துக்கள் எதுவும் இல்லை. ஆனால், விலைமதிப்பற்ற மக்களின் மனங்களை வென்ற அரசியல்வாதியாக அவர் இருந்துள்ளார்.

22 வருடங்களுக்கும் மேலான மக்கள் நட்புறவான அரசியல் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள பாலித தெவரப்பெரும, மக்கள் மனதில் பல மறக்க முடியாத நினைவுகளை விட்டுச் சென்றுள்ளார் என்று இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட பலர் கூறியுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More