அமெரிக்க விண்கலத்திற்கு கல்பனா சாவ்லாவின் பெயர் சூட்டப்பட்டது

அமெரிக்க விண்கலத்திற்கு விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்தியாவில் பிறந்த கல்பனா சாவ்லா, விண்வெளிக்கு சென்ற முதல் இந்திய வம்சாவழியை சேர்ந்த பெண் என்ற பெருமைக்குரியவர்.

கடந்த 2003ஆம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சிக்காக அமெரிக்கா அனுப்பிய கொலம்பியா விண்கலம் STS-107 மூலம் கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 விண்வெளி வீரர்கள் பயணித்தனர்.

அவர்கள் மீண்டும் பூமிக்கு திரும்பிய போது விண்கலம் வெடித்து சிதறியதில் அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் அமெரிக்க உலகளாவிய விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான ’Northrop Grumman’ வர்த்தகரீதியிலான விண்கலத்துக்கு, மறைந்த விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் பெயரை சூட்டியுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பொருட்களை ஏற்றிச் செல்லும் விண்கலமாக இது காணப்படுகின்றது.

இந்தநிலையிலேயே இதற்கு எஸ்.எஸ்.கல்பனா சாவ்லா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

விண்வெளிக்கு சென்ற இந்திய வம்சாவழியை சேர்ந்த முதல் பெண்ணாக வரலாற்றில் முக்கிய இடம் பெற்ற காரணத்திற்காகவே கல்பனா சால்வாவின் பெயரை தேர்ந்தெடுத்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர்