அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நடைபெற்ற இசை நிகழ்வொன்றின் போது இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 9 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கலிபோர்னியாவின் துலாரே கவுண்டியில் அமைந்துள்ள ஸ்ட்ராத்மோர் என்ற சிறிய நகரிலேயே இச்சம்பவம் பதிவாகியுள்ளது. இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் மீது அடையாளம் தெரியாத சந்தேகநபர்கள் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் குண்டர் கும்பல்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்ற போதிலும், அது குறித்த மேலதிக விவரங்கள் எதையும் வெளியிடவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
