செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா வாஷிங்டனில் மூட்டைப்பூச்சித் தொல்லை; 1,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வீட்டிலிருந்து பணி!

வாஷிங்டனில் மூட்டைப்பூச்சித் தொல்லை; 1,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வீட்டிலிருந்து பணி!

0 minutes read

அமெரிக்காவின் மத்திய அவசரநிலை நிர்வாக அமைப்பின் (FEMA) தலைமையகத்தில் ஏற்பட்டுள்ள மூட்டைப்பூச்சித் தொல்லை காரணமாக, 1,000க்கும் அதிகமான ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வாஷிங்டனில் அமைந்துள்ள இத்தலைமையகத்தின் பல மாடிகளில் மூட்டைப்பூச்சிகள் கண்டறியப்பட்டுள்ளதாக CNN செய்தி வெளியிட்டுள்ளது.

மூட்டைப்பூச்சிகளை ஒழிப்பதற்கான அவசர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் அலுவலகம் தற்காலிகமாக மூடப்படுவதாக ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஊழியர்களுக்கும் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான பணிச்சூழலை உறுதிப்படுத்துவதற்கு இந்த நடவடிக்கை அவசியமானது என அந்த மின்னஞ்சலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகிலுள்ள மற்றொரு கட்டடத்திலும் பூச்சி ஒழிப்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. குறித்த இரண்டு கட்டடங்களும் நாளை மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்ட போதிலும், பேரிடர் அவசர நடவடிக்கைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.