Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா “பில் கிளிண்டன் நலமாக உள்ளார்” -ஜோ பைடன் தகவல்!

“பில் கிளிண்டன் நலமாக உள்ளார்” -ஜோ பைடன் தகவல்!

1 minutes read

வாஷிங்டன்,
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனுக்கு, கொரோனா அல்லாத மற்றொரு வைரஸ் தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு அவா் கலிபோா்னியாவில் உள்ள இா்வின் பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

75 வயதான பில் கிளிண்டன் உடல் நலம் தேறி வருவதாகவும் அவா் மன உறுதியுடன் இருப்பதாகவும் அவரது செய்தித் தொடா்பாளா் ஏஞ்சல் உரேயா தெரிவித்தார். இந்த நிலையில் ஜனாதிபதி ஜோ படைன் பில் கிளிண்டனுடன் தொலைபேசியில் பேசி நலம் விசாரித்தார். அதோடு அவர் ஆஸ்பத்திரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு பில் கிளிண்டனின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.

இது குறித்து ஜோ பைடன் கூறுகையில் ‘‘பில் கிளிண்டன் நலமாக உள்ளார். அவருக்கு எந்த மோசமான உடல்நல பிரச்சினையும் இல்லை. விரைவில் அவர் வீடு திரும்புவார் என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் என்னிடம் தெரிவித்தது. அது நாளையா, நாளை மறுநாளா என்பது தெரியவில்லை’’ என கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More