அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சிறந்த ஆரோக்கியத்துடன் உள்ளார் என வெள்ளை மாளிகை, இன்று (17) அறிக்கையிட்டுள்ளது.
ஜனாதிபதியின் உடல் பரிசோதனைக்குப் பின்னர் மருத்துவர் வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டி, 80 வயதுடைய ஜோ பைடன் “கடமைக்கு தகுதியானவர்” என்று, வெள்ளை மாளிகை மேற்படி அறிக்கையிட்டுள்ளது.
“ஜனாதிபதி கடமைக்குத் தகுதியானவர். எவ்விதத் தடைகளும் இல்லாமல் தனது அனைத்துப் பொறுப்புகளையும் அவர் முழுமையாக நிறைவேற்றுகின்றார்” என்று மருத்துவப் பரிசோதனையின் பின்னர் வெள்ளை மாளிகை மருத்துவர் Kevin O’Connor கூறியுள்ளார்.