அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் , தனது இறுதிக்காலத்தை உறவினர்களுடன் கழிப்பதற்காக, தனக்கான சிகிச்சையை வீட்டிலேயே பெற முடிவுசெய்துள்ளார்.
தற்போதைய நிலையில் 98 வயதுடைய ஜிம்மி கார்ட்டர், அமெரிக்காவின் மிகவும் வயதான முன்னாள் ஜனாதிபதியாக உள்ளார்.
மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள கார்ட்டருக்கு அண்மை காலமாக சில உடல்நலப் பிரச்சினைகளும் ஏற்பட்டிருந்தன.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஜிம்மி கார்ட்டர் பதவி வகித்த காலப்பகுதியில், உள்நாட்டுப் பொருளாராத பிரச்சினைகள், ஈரான் நெருக்கடி போன்ற சவால்களை எதிர்கொண்டிருந்தார்.
அத்துடன், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த எகிப்து-இஸ்ரேல் அமைதி ஒப்பந்தத்தில் ஜிம்மி கார்ட்டர் முக்கியப் பங்கு வகித்தமை குறிப்பிடத்தக்கது.