Wednesday, May 1, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா தாய்வான் செல்லும் திட்டத்தை கைவிட்ட அமெரிக்கர்!

தாய்வான் செல்லும் திட்டத்தை கைவிட்ட அமெரிக்கர்!

0 minutes read

அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் கெவின் மெக்கார்தி (Kevin McCarthy), தாய்வான் நாட்டுக்கு விஜயம் மேற்கொள்ளும் தனது திட்டத்தைக் கைவிட்டுள்ளார்.

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பதற்றம் அதிகரிக்கும் நிலையிலேயே இவர் இவ்வாறு தனது முடிவை மாற்றியுள்ளார்.

எனினும், தாய்வான் ஜனாதிபதி சாய் இங் வென்னை (Tsai Ing-wen) அமெரிக்காவுக்கு வருமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

தாய்வானை தனியொரு நாடாக சீனா கருதவில்லை. தனது நாட்டின் ஒரு மாநிலமாகவே தாய்வானை சீனா கருதுகிறது. இதனால் தாய்வானுடன் யாரும் நேரடி அதிகாரத்துவத் தொடர்பை வைத்துக் கொள்வதைச் சீனா விரும்புவதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More