செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா சபரிமலை ஐயப்பன் ஆலய நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் ஆலய நடை திறப்பு!

0 minutes read

சபரிமலை ஐயப்பன் ஆலய நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) முதல் பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள்.

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் ஆலய நடை நேற்று திறக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று முதல் 21ஆம் திகதி வரை, 5 நாட்கள் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, கணபதி ஹோமம், உஷ பூஜை, நிர்மால்ய தரிசனம், உச்ச பூஜையை தொடர்ந்து மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.

அதன்பின்னர் 5 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்பட்டு, 6 மணிக்கு தீபாராதனை மற்றும் அபிஷேகம் செய்து, இரவு 9 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

மேலும் கொரோனா கட்டுப்பாடு தளர்வு காரணமாக, இன்று முதல் தினசரி 5 ஆயிரம் பக்தர்கள், இணையத்தின் முன் பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.