செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா விஜய் உடனான பிரச்சனை குறித்து மனம் திறந்த எஸ்.ஏ.சந்திரசேகர்!

விஜய் உடனான பிரச்சனை குறித்து மனம் திறந்த எஸ்.ஏ.சந்திரசேகர்!

0 minutes read

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சாக்ஷி அகர்வால், இனியா, பருத்திவீரன் சரவணன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் நான் கடவுள் இல்லை.

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் ஆண்டனி, இயக்குனர்கள் ராஜேஷ், பொன்ராம், தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும் போது, சில தினங்களுக்கு முன்பு ஒரு விழாவில் விஜய்க்கு பெயர் வைக்க காரணம் பற்றி சொல்லி இருந்தேன். அது இரு நாட்களில் வேற மாதிரி பேசுகிறார்கள். ஏன் இப்படி மாற்றி மாற்றி பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. எனக்கும் விஜய்க்கும் பிரச்சனை இருக்கிறது.

எந்த வீட்டில்தான் பிரச்சனை இல்லை. எந்த வீட்டிலும் அப்பா, மகன் சண்டை போடுவது இல்லையா… சில நாட்களில் அது கட்டிப்பிடித்துக் கொள்வார்கள். அதுபோல் தான் நானும் விஜய்யும். இன்று சண்டை போட்டுக் கொள்வோம், நாளை சேருவோம் என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.