செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா உபி.யில் பிரதிக்யா யாத்திரையை தொடங்கி வைத்தார் பிரியங்கா!

உபி.யில் பிரதிக்யா யாத்திரையை தொடங்கி வைத்தார் பிரியங்கா!

1 minutes read

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, உத்தர பிரதேச அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அவர் சமீபத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட பெண்களுக்கு 40 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில், ‘வாக்குறுதியை காப்பாற்றுவோம்’ என்ற முழக்கத்தோடு, ‘பிரதிக்யா யாத்திரை’ என்ற பெயரில், உபி.யில் காங்கிரஸ் 10 நாள் யாத்திரையை தொடங்கி உள்ளது. இதை லக்னோவில் பிரியங்கா காந்தி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது, அவர் பேசுகையில்ல, ‘‘12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன், பெண்களுக்கு இ-ஸ்கூட்டி, அனைத்து விவசாய கடன்கள் தள்ளுபடி, கோதுமைக்கு ரூ.2,500 குறைந்தபட்ச ஆதார விலை, 20 லட்சம் பேருக்கு அரசு வேலை, கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழை குடும்பங்களுக்கு பொருளாதார சிக்கலில் இருந்து மீண்டு வருவதற்கு ரூ.25,000, மின்கட்டணம் பாதியாக குறைக்கப்படும். பெண்களுக்கான பிரத்யேக தேர்தல் வாக்குறுதிகள் ஒரு வாரத்தில் வெளியிடப்படும்,” என்றார்.

பைசாபாத் ரயில் நிலையம் பெயரை மாற்றிய யோகி உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு, முக்கியத்துவம் வாய்ந்த நகரங்கள், ரயில் நிலையங்கள், பொது இடங்களின் பெயர்களை இந்து வரலாற்றின் அடிப்படையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் மாற்ற முடிவு செய்துள்ளார். இதன்படி, பைசாபாத் ரயில் நிலையத்தின் பெயரை, ‘அயோத்தியா காண்டம்’ என்று மாற்றம் செய்ய அவர் முடிவு செய்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.