செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ‘என்ன சொல்ல போகிறாய்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

‘என்ன சொல்ல போகிறாய்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

1 minutes read

‘குக் வித் கோமாளி’ புகழ் அஸ்வின் குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘என்ன சொல்லப் போகிறாய்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா’ என்ற படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஹரிஹரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘என்ன சொல்ல போகிறாய்’. 

இதில் நடிகர் அஸ்வின் குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகைகள் தேஜு அஸ்வினி மற்றும் அவந்திகா மிஸ்ரா ஆகிய இருவர் நடித்திருக்கிறார்கள். 

இவர்களுடன் ‘குக் வித் கோமாளி’ புகழ் நடிகர் புகழ், டெல்லி கணேஷ், சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு விவேக்-மெர்வின் இசை அமைத்திருக்கிறார்கள். 

இப்படத்தில் இடம்பெற்ற சிங்கிள் ட்ராக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

முக்கோண காதல் கதையாக தயாராகியிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இரண்டு வித தோற்றத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. 

ஒரு போஸ்டரில் அஸ்வின் குமாரும் தேஜு அஸ்வினியும் காதலுடன் நெருக்கமாக இருக்கும் காட்சியும், மற்றொரு புகைப்படத்தில் அஸ்வினும் அவந்திகா மிஸ்ராவும் மழையில் நனைந்து நெருக்கமாக இணைந்திருப்பது போலவும் வெளியிடப்பட்டிருக்கிறது. 

இதனால் இளம் இசிகர்கள் இதற்கு வரவேற்பு அளித்து வருகிறார்கள். டிரைடன் ஆர்ட்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆர் ரவீந்திரன் மிகுந்த பொருட்செலவில் இப்படத்தை தயாரித்திருக்கிறார். 

அனைத்து பணிகளும் நிறைவடைந்திருக்கும் இப்படத்தின்  வெளியீட்டு திகதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.