செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா ரஜினிகாந்தை முதலமைச்சர் நேரில் சென்று விசாரித்தார்!

ரஜினிகாந்தை முதலமைச்சர் நேரில் சென்று விசாரித்தார்!

0 minutes read

வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 28ஆம் திகதி மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் திடீரென அனுமதிக்கப்பட்டார்.

வழக்கமான சோதனைகளுக்காகவே அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக குடும்பத்தினர் ஊடகங்களிடம் தெரவித்தனர்.

எனினும் ரத்த குழாய் திசு அழிவு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனால் மருத்துவமனையில் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்து ரஜினிகாந்த் விரைவில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியானது.

இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வைத்தியசாலைக்கு நேரில் சென்று சிகிச்சைப் பெற்று வரும் ரஜினிகாந்திடம் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார்.

மேலும் வைத்தியசாலை வைத்தியர்களிடம் ரஜினிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.