ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே சீத்தஞ்சேரி கிராமத்தில் ரூ. 53 லட்சம் செலவில் நூலக கட்டிடம், ஆய்வகம் ஆகியவற்றை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஒன்றியம் அம்மபாக்கம் ஊராட்சி சீத்தஞ்சேரி கிராமத்தில் அரசு மாதிரி மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ. 53.27 லட்சம் செலவில் நூலக அறை, அறிவியல் ஆய்வகம், கலை ஓவிய அறை ஆகியவை கட்டப்பட்டன. இந்த கட்டிடங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 3ம் தேதி கணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அப்போது, இந்த கட்டிடங்களை மாணவர்கள் மற்றும் மக்கள் பயன்பாட்டிற்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். தலைமையாசிரியர் முரளிதர் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜெ.மூர்த்தி, ஒன்றிய செயலாளர் ரவி, பூண்டி ஒன்றிய குழு துணை தலைவர் மகாலட்சுமி மோதிலால், துணைச்செயலாளர் நாகராஜ், ஊராட்சி மன்ற தலைவர் சரசு பூபாலன், ராகவன் ஞானமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.