வாஷிங்டன்,
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள மளிகை கடை ஒன்றிற்குள் திடீரென புகுந்த மர்ம நபர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் கடைக்குள்ளேயே ஒருவர் உயிரிழந்து உள்ளார். மற்றொருவர் காயமடைந்து உள்ளார்.
இதனை தொடர்ந்து கடைக்கு வந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். துப்பாக்கி சூடு நடத்திய நபர் தப்பியோடி விட்டார். அவர் தாக்குதல் நடத்தியதற்கான காரணம் பற்றி தெரியவரவில்லை. இதுபற்றிய விசாரணை நடந்து வருகிறது.