செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் இந்த பருப்பு வகை உடல் எடை குறைக்கும்

இந்த பருப்பு வகை உடல் எடை குறைக்கும்

1 minutes read

அதிக உடல் எடை பல்வேறு நோய்களுக்கும் வழிவகுக்கிறது. சிலர் மருந்துகளின் மூலம் அதிரடியாக உடல் எடையை குறைக்கின்றனர். இது தீங்கு விளைவிக்க கூடியதாகும்.

உணவு, தூக்கம் போன்றவற்றில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்துதல் உடற்பயிற்சி செய்தல் போன்றவற்றால் படிப்படியாக எடையை குறைப்பதே ஆரோக்கியத்துக்கு நல்லது.

இவற்றில் உள்ள புரசச்சத்து, நார்ச்சத்து விட்டமின்கள் தாது உப்புகள் போன்றவை எடை குறைப்பிற்கு அவசியமானவை.

மேலும் பருப்பு வகைகள் இதயம் சார்ந்த நோய்கள் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கின்றன.

அதிக பசி உண்டாகாமல் தடுப்பதில் இவை முக்கிய பங்காற்றுகின்றன.

பாதாமில் புரசச்சத்து ஆன்டி ஆக்சிடென்டுகள் ஆகியவை அதிக அளவில் உள்ளன.

இவை கெட்ட கொழுப்பு அதிகரிக்காமல் தடுக்கின்றன. இதன் மூலம் எடை சீரான அளவில் இருக்கும்.

பாதாமில் உள்ள அமினோ அமிலங்கள் இதயத்திற்கு நன்மை தருகின்றன.

தினமும் நான்கு அல்லது 5 பாதாம் பருப்பு சாப்பிடுவது போதுமானது.

அக்ரூட் எனப்படும் வால்நட், உடலில் சேரும் தேவையற்ற கொழுப்பை வெளியேற்றுகிறது.

இதில் ஓமேகா என்னும் சத்து அதிக அளவில் உள்ளது.

பிஸ்தாவில் குறைந்த அளவிலான புரதச்சத்து இருந்தாலும் அது தசை நார்களின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும் இது தேவையற்ற கொழுப்புகளை கரைக்கும் தன்மை கொண்டது.

முந்திரியில் மக்னீசியம் மற்றும் புரதம் உள்ளது. இது வளர்ச்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

முந்திரியில் கலோரி அதிக அளவில் இருப்பதால் மிகக்குறைந்த அளவில் எடுத்துகொள்ளவேண்டும்.

இவ்வாறு பருப்பு வகைகள் நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை நீக்குவது மட்டுமில்லாமல் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் அளிக்கின்றன.

நன்றி ஆரோக்கிய மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.