செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் இலகு பாட்டி வைத்தியம்

இலகு பாட்டி வைத்தியம்

1 minutes read

வெள்ளைத் தேமல் குணமாக

துளசியையும், உப்பையும் சம அளவு எடுத்து இடித்து அதன் சாற்றை வெள்ளைத் தேமல் உள்ள இடங்களில் பூசிவர அது குணமாகும்.

இரத்தம் சுத்தமடைய

12சிறிய வெங்காயத்தை உரித்து வைத்துக்கொள்ளவும். குளித்த பின் தலை ஈரம் துடைக்காமல் அந்த வெங்காயங்களைச் சாப்பிட்டுவிட்டு தலை ஈரத்தை துடைக்கவும். இவ்வாறு 10 நாட்கள் தொடர்ந்து உண்டுவர நன்மை ஏற்படும்.

இரத்தக் கொதிப்பு

வெண் தாமரை மலரைத் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்தால் கஷாயம் ஆகிவிடும், இந்தக் கஷாயத்தை தினமும் இரு தடவை ஒரு டம்ளர் வீதம் 48 நாட்களுக்கு தொடர்ந்து அருந்திவர இரத்தக் கொதிப்பு நோய் குணமாகும்.

ரத்தத்தில் கொழுப்பு (கொலஸ்ட்ரால்)

தினசரி வெங்காயத்தை பச்சையாகவோ, சாறாகவோ, வறுத்தோ, சமைத்தோ தொடர்ந்து 46 நாட்கள் உண்டுவருபவர்களுக்கு கொலஸ்ட்ரால், இரத்த அழுத்த நோய் அகலும்.

வாத வலி

வெங்காயப் பூவை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொள்ளவும். அதை ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைக்கவும். இதை காலை, மாலை என தினமும் இருவேளை 15 நாட்கள் அருந்திவர வாதக் கோளாறுகள் அனைத்தும், வாத வலிகள், அனைத்தும் குணமாகும்.

வாதநோய்

முருங்கைப் பட்டையை எடுத்து இடித்து வைத்துக்கொள்ள வேண்டும். அரைப்படி வெள்ளைக் கடுகையும், ஒரு தேக்கரண்டி பெருங்காயத்தையும் எடுத்து இடித்துப் பொடி செய்து கொள்ள வேண்டும். பின்பு இம்மூன்றுப் பொருட்களையும் சேர்த்து வேக வைக்க வேண்டும். வெந்தபின் கீழிறக்கி அவற்றை நன்றாக அரைக்க வேண்டும். அதை எடுத்து இரவில் கால் மூட்டு வீக்கம், வலி, நீர் கோர்வையால் கீழ் மூட்டுவாத நோயுடைய இடங்களில் தடவி வர வேண்டும். அதிகாலையில் வெந்நீரில் குளிக்க வேண்டும். பல நாட்களுக்கு இவ்வாறு தொடர்ந்து செய்தால் பலன் கிடைக்கும்.

நன்றி தினசரி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.