செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் நெல்லிக்காய் பாக்கு | நன்மைகள்

நெல்லிக்காய் பாக்கு | நன்மைகள்

1 minutes read

நெல்லிக்காயின் மருத்துவ குணத்தைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை.

அது கொடுக்கும் நன்மைகளுக்கு மட்டும் அளவே இல்லை. அதில் பலருக்கும் நெல்லிக்காய் ஜூஸ், நெல்லிக்காய் பொடி பற்றி தெரியும். ஆனால் நெல்லிக்காய் பாக்கு குறித்து தெரிந்திருக்கமாட்டோம்.

நெல்லிக்காய் பாக்கு என்பது வெயிலில் உலர்த்தியது. இந்த ஒரு துண்டு காய்ந்த நெல்லிக்காய் அல்லது நெல்லிக்காய் பாக்கை உட்கொண்டால், அதனால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். இங்கு உலர்ந்த நெல்லிக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

கர்ப்ப கால குமட்டல்
கர்ப்ப காலத்தில் குமட்டல் ஏற்படுவது பொதுவானது தான். இத்தகைய குமட்டலில் இருந்து விடுபட ஒரு துண்டு உலர்ந்த நெல்லிக்காயை வாயில் போட்டு மெதுவாக மென்று அதன் சாற்றினை விழுங்க, குமட்டல் குணமாகும்.

செரிமானம்
செரிமான பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுபவர்கள், கண்ட மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக ஒரு துண்டு உலர்ந்த நெல்லிக்காயை வாயில் போட்டு மென்று விழுங்கினால், செரிமான பிரச்சனைகள் விரைவில் தடுக்கப்படும்.

வயிற்று வலி
நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாலிஃபீனால்கள் அதிகம் உள்ளது. இது வயிற்றில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, வயிற்று வலியில் இருந்து உடனடி நிவாரணம் தரும்.

நோயெதிர்ப்பு சக்தி
நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். அதிலும் தினமும் ஒரு துண்டு உலர்ந்த நெல்லிக்காயை உட்கொண்டு வந்தால், அடிக்கடி ஏற்படும் காய்ச்சல், சளி போன்றவற்றின் தாக்குதல்களில் இருந்து விடுபடலாம்.

நெல்லி பாக்கு தயாரிக்கும் முறை
1/2 கப் நெல்லிக்காய் துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 1/2 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, பின் அதனை ஒரு தட்டில் வைத்து, வெயிலில் வைத்து சில நாட்கள் உலர்த்தி, பின் காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆதாரம்: தமிழ் போல்ட்ஸ்கை

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.