இஸ்லாமிய தேச பயங்கரவாத அமைப்பில் இணையக்கூடும் என்ற சந்தேகத்தின் கீழ், ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேற 230 பேருக்கு அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
பதின்ம வயதைச் சேர்ந்த 3 பேரும் இதில் அடங்குவர்.
ஐ.எஸ்.ஸில் இணைவதற்காக துருக்கி மூலம் சிரியா செல்ல முயன்ற இரு சகோதரர்கள் உள்ளிட்ட 3 இளைஞர்களை, காவல்துறையினர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி, அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
மேலும், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் 100 முதல் 250 ஆஸ்திரேலியர்கள் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழலில், ஆஸ்திரேலிய பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு இந்த 230 பேருக்கும் வெளிநாட்டுப் பயணத் தடை விதித்துள்ளது.