செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் நல்லிணக்க தேவைகளை அடையாளம் கண்டறிந்து, தீர்வு காண்பதற்காக சிறிசேனா அரசு அதிரடி நடவடிக்கைநல்லிணக்க தேவைகளை அடையாளம் கண்டறிந்து, தீர்வு காண்பதற்காக சிறிசேனா அரசு அதிரடி நடவடிக்கை

நல்லிணக்க தேவைகளை அடையாளம் கண்டறிந்து, தீர்வு காண்பதற்காக சிறிசேனா அரசு அதிரடி நடவடிக்கைநல்லிணக்க தேவைகளை அடையாளம் கண்டறிந்து, தீர்வு காண்பதற்காக சிறிசேனா அரசு அதிரடி நடவடிக்கை

1 minutes read

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுத்த முன்னாள் அதிபர் சந்திரிகா தலைமையில் பணிக்குழு ஒன்றை சிறிசேனா அரசு அமைத்துள்ளது.

இலங்கையில் 30 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டுப்போர் கடந்த 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. போர் முடிந்து 6 ஆண்டுகளாகியும் இன்னும் தமிழ் மக்கள், சிங்கள மக்களுடன் சம மரியாதை, அந்தஸ்து, மதிப்பு பெற்று வாழ்கிற நிலை, அங்கு உருவாகவில்லை.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் அந்த நாட்டின் அதிபர் சிறிசேனாவுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அவர் சிறிசேனாவிடம், ‘இலங்கையில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் 13-வது அரசியல் சட்ட திருத்தம் விரைவில், முழு அளவில் செயல்படுத்தப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

அதற்கேற்ப, தமிழ் மக்களின் அவசர நல்லிணக்க தேவைகளை அடையாளம் கண்டறிந்து, தீர்வு காண்பதற்காக முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் தலைமையில் ‘நல்லிணக்கத்துக்கான அதிபரின் பணிக்குழு’ என்ற பெயரில் ஒரு குழுவை சிறிசேனா அரசு அமைத்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே நேற்று வெளியிட்டார். அப்போது அவர், “இலங்கையில் சமூக, மத நல்லிணக்கத்தை உருவாக்கி சாதிக்க வேண்டும் என்பதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். தமிழ் சிறுபான்மை மக்களின் நல்லிணக்கம் தொடர்பான அவசர தேவைகளை கண்டறிவதற்காக முன்னாள் அதிபர் சந்திரிகா குமார துங்கா தலைமையில் ஒரு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது” என கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.