செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மக்களால் நிரம்பி வழிந்த கனகபுரம் துயிலும் இல்லம்! – கண்ணீருடன் அஞ்சலி

மக்களால் நிரம்பி வழிந்த கனகபுரம் துயிலும் இல்லம்! – கண்ணீருடன் அஞ்சலி

1 minutes read

கிளிநொச்சி, கனகபுரம் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களது உறவினர்கள் மற்றும் பொதுமக்களால் மாவீரர் நாள் அஞ்சலிகள் செலுத்தப்பட்டன.

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் வளாகம் சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு மாவீரர்களை நினைவுகூரும் தாயகப் பாடல்கள் ஒலிக்கப்பட்டு அந்த வளாகம் உணர்வுபூர்வமாகக் காணப்பட்டது

தமிழ் மக்களின் விடுதலைக்காகத் தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களது பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு கண்ணீருடன் மாவீரர்களுக்கான தங்களது அஞ்சலி செலுத்தினார்கள்.

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் வளாகம் பொதுமக்களால் நிரம்பி வழிந்தது. அவர்கள் கண்ணீருடன் மலர் தூவி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

மாலை 6.05 இற்கு மணி ஓசை எழுப்பப்பட்ட பின்னர் பொதுச்சுடரைக் காக்கா அண்ணன் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஏனைய சுடர்களும் ஏற்றப்பட்டன.

கோட்டாபாய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் கடந்த வருடங்களில் தடை செய்யப்பட்டிருந்த மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வு ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின்னர் மீண்டும் இடம்பெற்றது.

– வணக்கம் இலண்டனுக்காக சிவா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.