0
எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
அதன்படி, டிசம்பர் 24, 25, 26, 31 மற்றும் ஜனவரி முதலாம் திகதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என்று அவர் கூறினார்.
எவ்வாறாயினும், இன்றும் நாளையும் 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டை அமுல்படுத்தப் பொதுப் பயன்பாடு ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.