1
மேல் மாகாணத்தில் 223 பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை இடம்பெறுகின்றது எனத் தமக்குத் தகவல் கிடைத்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அந்தத் தகவலின் அடிப்படையில் மேல் மாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தால் ஒவ்வொரு பாடசாலைக்கும் போதைப்பொருள் தடுப்புப் பயிற்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் என்பன மேல் மாகாண கல்வி அமைச்சின் அனுமதியுடன் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளன.